/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளா சமாஜம் சார்பில் ஓணம் கொண்டாட்டம்
/
கேரளா சமாஜம் சார்பில் ஓணம் கொண்டாட்டம்
ADDED : அக் 03, 2025 09:25 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், கேரளா சமாஜம் சார்பில், ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி தாலுகா, கேரளா சமாஜம் சார்பில் ஓணம் திருவிழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.கேரளா சமாஜத்தின் தலைவர் சோமன் மேத்யூ தலைமை வகித்தார். மாவேலி ராஜா வேடம் அணிந்து வந்தவர் விழாவில் பங்கேற்றவர்களை வரவேற்றனர்.
மேலும், கேரளா பாரம்பரியமான செண்டைமேளம் பெண்கள் வாசிக்க அதற்கு தகுந்தார் போல் பெண்கள் நடனமாடினர்.விழாவில், பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி, நகராட்சி தலைவர் சியாமளா, அகில இந்திய மலையாளிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பிரவீன், திருவிழாவின் தலைவர் சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில், கேரளா சமாஜத்தின் சார்பில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.