ADDED : ஆக 28, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. விழாவை கல்லுாரி முதல்வர் கோபி துவக்கி வைத்தார். விழா ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் ரேகா வரவேற்றார்.
விழாவில், மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று கல்லுாரி வளாகத்தில் வண்ணமயமான அத்தப்பூக்கோலமிட்டு அசத்தினர். தொடர்ந்து மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை மகளிர் மேம்பாட்டுக்குழு மற்றும் நுண்கலை மன்ற உறுப்பினர்கள் பிரியதர்ஷினி, மம்தாசிஜோ, பூர்ணிமா ஆகியோர் செய்திருந்தனர்.
