ADDED : ஆக 28, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறையில் பெய்யும் தொடர் மழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 103.50 அடியாக உயர்ந்தது.
வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் முதல், தென்மேற்கு பருவமழை பெய்கிறது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால் பி.ஏ.பி., அணைகள் எதுவும் நிரம்பவில்லை.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இதனால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருவதோடு, அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில் நேற்று காலை, 103.50 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,901 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,622 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
