/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி, கல்லுாரிகளில் ஓணம் கொண்டாட்டம்
/
பள்ளி, கல்லுாரிகளில் ஓணம் கொண்டாட்டம்
ADDED : செப் 04, 2025 10:53 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளில், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், ஓணம் பண்டிகை, 'படக்களம்' என்ற பெயரில் நடைபெற்றது. கல்லுாரி தலைவர் வெங்கடேஷ், துணை தலைவர் விஜயமோகன், இயக்குனர் ஸ்ரீகாந்த், கல்லுாரி முதல்வர் வனிதாமணி ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர். கல்லுாரி மாணவர்கள், பாரம்பரிய உடையணிந்து வந்தனர்.
மாணவர்கள், பூக்களை கொண்டு பூக்கோலமிட்டனர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவேலி மன்னராக கல்லுாரி மாணவர் ஒருவர் வேடமணிந்து வந்தார். மாவேலி ஊர்வலம் கல்லுாரியில் துவங்கி பழநி ரோடு வழியே சென்று மீண்டும் கல்லுாரியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது செண்டை மேள குழுவினர், பூக்காவடி குழுவினர் பங்கேற்றனர். மாணவியரின் திருவாதிரை நடன நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி ஆர்.கோபாலபுரம் எம்.எம்.எஸ். மெட்ரிக் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதில், ஓணம் பிறந்த கதை குறித்த நாடகம், திருவாதிரை நடனம், புலியாட்டம், ஓணப்பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.