/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓணம் பண்டிகை; காய்கறி விற்பனை விறுவிறு
/
ஓணம் பண்டிகை; காய்கறி விற்பனை விறுவிறு
ADDED : செப் 02, 2025 08:50 PM

மேட்டுப்பாளையம்; ஓணம் பண்டிகை 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு வியாபாரம் சூடு பிடித்துள்ளது. விலை உயர்வால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. ஓணம் விருந்துக்காக மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க கேரள வியாபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்து விற்பனை ஆகி வருகிறது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ''மார்க்கெட்டில் நேற்றைய தினம் கேரட் ஒரு கிலோ ரூ.60- 70, பீன்ஸ் ரூ. 20- 30, பீட்ரூட் ரூ.20- 50, முட்டைக்கோஸ் ரூ.7- 11 வரை விற்பனை ஆனது. இந்த விலையை விட நேற்று முன் தினம் 10 சதவீதம் குறைவாக இருந்தது.
ஊட்டி உருளைக்கிழங்குகள் வரத்து நேற்று அதிகரித்தது. 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உருளைக்கிழங்கு ரூ.1,620க்கு விற்பனை ஆனது,'' என்றனர்.