ADDED : டிச 29, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம், சேரன் நகர், பூங்கா அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, வேலாண்டிபாளையம், திலகர் வீதியைச் சேர்ந்த அருண்,25, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை எஸ்.ஐ., சண்முகசுந்தரம் கைது செய்து, அவரிடமிருந்து, 530 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தார். கைது செய்யப்பட்ட அருண், சிறையில் அடைக்கப்பட்டார்.

