தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆலமரம் ஒன்று... வேம்பு இரண்டு வேரோடு பெயர்த்தெடுத்து மறுநடவு

 ஆலமரம் ஒன்று... வேம்பு இரண்டு வேரோடு பெயர்த்தெடுத்து மறுநடவு

 ஆலமரம் ஒன்று... வேம்பு இரண்டு வேரோடு பெயர்த்தெடுத்து மறுநடவு


ADDED : பிப் 09, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 04:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: முப்பது ஆண்டுகளுக்கும் மேலான மூன்று மரங்களை வேரோடு பெயர்த்து எடுத்து கல்லுாரிக்குள் நட்டு சாதித்துள்ளது, கோவை கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அமைப்பு சிபாக்கா.

பீளமேட்டில் உள்ள ஒரு பழமையான மில் ஒன்றில், அரிய வகை ஆலமரம் ஒன்று இருந்தது. அதனோடு இரண்டு வேப்பமரங்களும் இருந்தன. இந்த மரங்களை வெட்டி அகற்றி, இடத்தை பயன்படுத்த அதன் உரிமையாளர் முடிவு செய்தார்.

இதையறிந்த சிபாக்கா அமைப்பு, அந்த மரங்களை அப்படி பெயர்த்து எடுத்து வேறிடத்தில் நட முடிவு செய்தது. இடம் கேட்டு ஜி.ஆர்.டி. கல்லுாரியை அணுகியபோது, அவர்களும் ஒப்புக் கொண்டனர். மரத்தை நள்ளிரவில் பொக்லைன், கிரேன்களின் உதவியுடன் வேரோடு பெயர்த்து எடுத்தனர்.

அதை ஜி.ஆர்.டி.கல்லுாரி வளாகத்தில் விளையாட்டு மைதானத்தின் ஓரத்தில் சிறப்பு பூஜைகளுடன் நேற்று மறு நடவு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிபாக்கா தலைவர் செந்தில்குமார், ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன், ஜி.ஆர்.டி. கல்வி குழுமத்தின் தாளாளர் கீதா பத்மநாபன், கல்லுாரியின் துணைத்தலைவர் ராமச்சந்திரன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us