/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளியூர் செல்ல காத்திருந்த பயணியர் 20 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கம்
/
வெளியூர் செல்ல காத்திருந்த பயணியர் 20 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கம்
வெளியூர் செல்ல காத்திருந்த பயணியர் 20 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கம்
வெளியூர் செல்ல காத்திருந்த பயணியர் 20 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கம்
ADDED : அக் 23, 2025 12:00 AM

வால்பாறை: தீபாவளி விடுமுறையில் வால்பாறை வந்தவர்கள், வெளியூர் செல்ல நீண்ட நேரம் காத்திருந்தனர்.
தீபாவளி பண்டிகை கடந்த திங்கள் கிழமை கோலகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை கொண்டாட நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்டது. தொடர் விடுமுறையால் கோவை, திருப்பூர், ஈரோடு, பழநி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வால்பாறையை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்தனர்.
விடுமுறை நிறைவடைந்த நிலையில் மீண்டும் பணிபுரியும் இடங்களுக்கு செல்ல வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்டில் மக்கள் திரண்டனர். நீண்ட நேரம் காத்திருந்து பஸ்களில் பயணம் செய்தனர். நெரிசலால் குழந்தைகள், முதியவர்கள் அவதிப்பட்டனர்.
பயணியர் கூறியதாவது:
வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தான் வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த பஸ் ஸ்டாண்டில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.
இதனால், ரோட்டில் பஸ்சிற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பண்டிகை காலங்களில் கூடுதல் பஸ்களை இயக்கினால் பயணியர் சிரமமின்றி பயணம் செய்ய முடியும்.
இவ்வாறு, கூறினர்.
அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி, கோவைக்கு கூடுதல் பஸ் இயக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் பஸ் இயக்குவதை விட கூடுதலாக ஒன்பது பஸ்கள் பொள்ளாச்சிக்கு இயக்கப்படுகிறது.
ஒவ்வொரு, 20 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் பொள்ளாச்சிக்கு இயக்கப்படுகிறது. ஆனால், கூட்டம் அதிகமாக இருப்பதால், பயணியர் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது,' என்றனர்.