/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எட்டு மாதங்களில் ஒரு கோடி பேர்
/
எட்டு மாதங்களில் ஒரு கோடி பேர்
ADDED : செப் 26, 2024 11:53 PM
கோவை : நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, தொழில், மருத்துவம், ஆன்மிக இடங்கள், சுற்றுலா என, கோவைக்கு வந்தவர்கள் எண்ணிக்கை, ஒரு கோடியை தொட்டுள்ளது.
தமிழகத்தில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரமாக கோவை விளங்குகிறது. மோட்டார்பம்ப்கள், வெட் கிரைண்டர்கள் தயாரிப்பில், கோவை முன்னிலை பெற்று வருகிறது. கல்வி, மருத்துவம் என கோவை தனித்த அடையாளம் பெறுகிறது.
தொழில் மற்றும் மருத்துவம் நிமித்தமாகவும், ஆன்மிக மற்றும் வழிபாட்டு இடங்களுக்கும், சுற்றுலா ஸ்தலங்களான ஆழியாறு அணை, கவியரவி நீர்வீழ்ச்சி, கோவை குற்றாலம், சோலையாறு அணை, கல்லாறு தோட்டக்கலைப் பண்ணை, பரளிக்காடு போன்ற இடங்களுக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதன்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவைக்கு, கடந்த ஜனவரி மாதம் 15 லட்சத்து, 98 ஆயிரத்து 462, பிப்., மாதம், 18 லட்சத்து, 29 ஆயிரத்து 867, மார்ச் 12 லட்சத்து, 98 ஆயிரத்து 27, ஏப்., 12 லட்சத்து 51 ஆயிரத்து 584 பேர் வந்துள்ளனர்.
மே மாதம் 13 லட்சத்து 53 ஆயிரத்து 321, ஜூன் 9 லட்சத்து 65 ஆயிரத்து 724, ஜூலை 9 லட்சத்து 17 ஆயிரத்து, 598, ஆகஸ்ட் மாதம் 9 லட்சத்து 75 ஆயிரத்து 224 பேர் என, மொத்தம், ஒரு கோடியே ஒரு லட்சத்து, 89 ஆயிரத்து 807 பேர் வந்துள்ளனர்.
பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து, கடந்த ஜனவரி மாதம் 5,705, பிப்., 3,692, மார்ச் 6,930, ஏப்., 1,435 பேர் கோவை வந்துள்ளனர். மே 1,107, ஜூன் 1,772, ஜூலை 1,436, ஆக., 1,538 பேர் என, 23 ஆயிரத்து 615 பேர் கோவை வந்து சென்றுள்ளனர் என, சுற்றுலா வளர்ச்சி கழக பதிவில் தெரியவந்துள்ளது.