/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மையத்தடுப்பில் மண் அள்ள ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு!
/
மையத்தடுப்பில் மண் அள்ள ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு!
மையத்தடுப்பில் மண் அள்ள ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு!
மையத்தடுப்பில் மண் அள்ள ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு!
ADDED : ஜன 03, 2025 11:50 PM

கோவை; கோவை மாநகராட்சி பராமரிப்பில், 3,236.96 கி.மீ., சாலைகள் உள்ளன. இவை தவிர, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் பிரதான ரோடுகள் இருக்கின்றன.
நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வந்த சாலை பணியாளர்கள், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டதும், சாலையின் மையப்பகுதியில் பரவிக் கிடக்கும் மண்ணை அள்ளுவதில்லை.
வி.ஐ.பி.,க்கள் வரும் சமயத்தில், மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களால் மண் மற்றும் குப்பை அகற்றப்படுகிறது.
பரவிக்கிடக்கும் மண் துகள்களால், பிரதான ரோடுகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு உடல் கோளாறு ஏற்படுகிறது. மையத்தடுப்புகளுக்கு அருகே பரவியுள்ள, மண் துகள்களால் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இதற்கு தீர்வு காண, மாநகராட்சி முன்வந்திருக்கிறது.
மண்டலத்துக்கு இரண்டு வீதம், 10 மினி டிப்பர் வாகனங்களை, வாடகை அடிப்படையில் இரு மாதத்துக்கு நியமிப்பது என்றும், 200 துாய்மை பணியாளர்களை ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனம் மூலம் நியமிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கென, மாநகராட்சி பொது நிதியில் ஒரு கோடி ரூபாயை செலவழிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

