/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய்; முன்னாள் மாணவர் தாராளம்
/
பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய்; முன்னாள் மாணவர் தாராளம்
பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய்; முன்னாள் மாணவர் தாராளம்
பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய்; முன்னாள் மாணவர் தாராளம்
ADDED : ஜூலை 28, 2025 12:15 AM

கோவை; கோவையில் அரசு நிதிஉதவியுடன் செயல்படும் தேவாங்க மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியாக பள்ளிக்கு வழங்கினார்.
இப்பள்ளியில், 1975ம் ஆண்டு தொடங்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 50வது பொன்விழா, ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் பொன்விழா நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
பள்ளிக்குழு தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2024-25 கல்வியாண்டில் பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் பாடத்தேர்வில் 'சென்டம்' எடுத்த மாணவர்களுக்கு, ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. சாதனை படைத்த முன்னாள் மாணவர்களுக்கும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒரு கோடி ரூபாய் நிதி இப்பள்ளியில் 1962ல் பயின்ற முன்னாள் மாணவரும், கோவையைச் சேர்ந்த தொழிலதிபருமான அழகிரி தாமோதரன், பள்ளி மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியாக வழங்கினார். இந்த நிதியை பயன்படுத்தி, மாணவர்களின் கல்வித்திறன் வளர்ச்சி, விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அழகிரி தாமோதரன் கூறுகையில், ''நான் கல்வி பெற்ற பள்ளிக்காக, ஒரு சிறிய பங்களிப்பாகவே இந்த நிதியை வழங்குகிறேன்,'' என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் ஆத்மலிங்கம், உப தலைவர் ஜெகதீசன், பொது செயலாளர் பசுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.