/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்
/
இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்
ADDED : நவ 18, 2025 03:20 AM
அன்னுார்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் உள்ளபல லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 60க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து உள்ள ஜாக்டோ ஜியோ சார்பில் 18ம் தேதி (இன்று) ஒரு நாள் வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது.
அனைத்து அரசு துறை ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் இதில் பங்கேற்கின்றனர். இதன் பிறகும் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

