/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்முனைவோருக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு
/
தொழில்முனைவோருக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு
ADDED : ஜன 22, 2025 12:27 AM
கோவை; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு, கோவை பாரதியார் பல்கலையில் வரும் ஜன., 31ல் நடக்கிறது.
கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் 'ஸ்டார்ட் அப் ' நிறுவனர்களுக்கு 'சாட் ஜி.பி.டி.,' பயன்படுத்தி, வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை, இந்த வகுப்பு வழங்கும்.
இப்பயிற்சி விபரங்களை, www.editn.in என்ற வெப்சைட் வாயிலாகவும், 8072 799 983/ 90806 09808 ஆகிய எண்கள் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.