தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாறையில் மோதி விபத்து ஒருவர் பலி; மூவர் காயம்

 பாறையில் மோதி விபத்து ஒருவர் பலி; மூவர் காயம்

 பாறையில் மோதி விபத்து ஒருவர் பலி; மூவர் காயம்


ADDED : மார் 18, 2026 09:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 09:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலா வந்த கார் விபத்துக்குள்ளானதில், கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணி பரிதாபமாக இறந்தார்.

கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த ஜோசிதாஸ் மற்றும் குடும்பத்தினர் நான்கு பேர், காரில் சாலக்குடி வழியாக வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். அதன்பின், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்ல, மலைப்பாதையில் சென்றனர்.

அப்போது, மூன்றாவது கொண்டைஊசி வளைவு அருகே அதிவேகமாக சென்ற வாகனம் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தை ஓட்டிய ஜோசிதாஸின் மாமா சோனிஜேக்கப், 50, என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரில் இருந்த, ஜோசிதாஸ், 48, அவரது மனைவி மோளம்மா, 46, மகன் ஆல்பர்ட், 19, ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். காடம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us