/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்னதடாகம் அருகே யானை தாக்கி ஒருவர் காயம்
/
சின்னதடாகம் அருகே யானை தாக்கி ஒருவர் காயம்
ADDED : ஜூலை 10, 2025 10:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; சின்னதடாகம் அருகே உள்ள வீரபாண்டி கீழ்பதியை சேர்ந்தவர் மருதன், 65. பழங்குடியின கூலித் தொழிலாளி. நேற்று இரவு மருதங்கரை மேல்பதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 33, என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீரபாண்டியிலிருந்து மருதங்கரைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒற்றைக் காட்டு யானை குறுக்கே வந்தது.
யானை தாக்கியதில் மருதனுக்கு இடது கை, மற்றும் இடது கால் ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டது. மருதன், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.