/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றி தாக்கி ஒருவர் காயம்; தொடர் சம்பவங்களால் விவசாயிகள் கவலை

ADDED : மார் 18, 2025 11:13 PM
பெ.நா.பாளையம்; ஒரே மாதத்தில் காட்டுப்பன்றி தாக்கி, இருவர் காயம் அடைந்தனர். இச்சம்பவங்களுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு தேக்கம்பட்டியைச் சேர்ந்த சரத்,25, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, தேக்கம்பட்டி அடுத்துள்ள தேவனாபுரம் அருகில் ரோட்டின் குறுக்கே காட்டுப்பன்றி வந்ததால், இருசக்கர வாகனத்தில் மோதி, சரத் கீழே விழுந்து காயம் அடைந்து, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே, வெள்ளியங்காட்டைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜ், காட்டுப்பன்றி தாக்கி படுகாயம் அடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் நினைவு திரும்பாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அடுத்தடுத்து காட்டுப்பன்றி, மனிதர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்களும், அதனால் தனி நபர்கள் பாதிக்கும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது.
தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால் கூறுகையில், ''காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல, சட்டசபையில் வனத்துறை அமைச்சர் அறிவிப்பு செய்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை நடவடிக்கை இல்லை,'' என்றார்.