ADDED : மார் 11, 2024 01:29 AM
அ நிறம் | அளவு
போத்தனுார்;குனியமுத்தூர் போலீஸ் எஸ்.ஐ., மணிகண்டன் நேற்று முன்தினம் சுகுணாபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து சென்றார். சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தார்.
சுகுணாபுரம் பழனியப்பா நகரை சேர்ந்த டிரைவர் அப்துல் ரஹ்மான், 34 என்பதும், விற்பனைக்காக, 1.1 கி.கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரிந்தது. கஞ்சாவுடன், அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.
