ADDED : நவ 24, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: தொட்டியனூரைச் சேர்ந்த துரைசாமி மகன் ஸ்ரீகாந்த், 22. டிராக்டர் டிரைவர். இவரது உறவினர் அதே ஊரைச் சேர்ந்த ஜெகதீஷ், 24. இருவரும் நேற்று முன்தினம் இரவு அன்னூருக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
காக்காபாளையம் அருகே செல்லும்போது சாலையோரம் ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் கோபியைச் சேர்ந்த ராகவன், 29. மற்றும் முருகவேல், 33. இருவரும் அமர்ந்திருந்தனர்.
அந்த பைக் மீது ஸ்ரீகாந்த் ஓட்டி சென்ற பைக் மோதியது. இதில் நான்கு பேரும் காயமடைந்தனர். அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்ரீகாந்த் இறந்தார். மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

