/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் சாலை விழிப்புணர்வு உறுதிமொழி
/
அரசு பள்ளியில் சாலை விழிப்புணர்வு உறுதிமொழி
ADDED : நவ 24, 2025 06:14 AM

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், சாலை விழிப்புணர்வு உறுதி மொழியை மாணவ, மாணவியர் ஏற்றனர்.
பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சாலை விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர் சாலை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தலை கவசம் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது. மது போதையில் வாகனம் செலுத்துவது சட்டப்படி குற்றம். சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்து, பாதுகாப்புடன் வாகனத்தை ஓட்ட வேண்டும். வேகத்தை கட்டுப்படுத்தி சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். விபத்து நேர்ந்தால் உதவ வேண்டும். சாலை குறியீடுகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என கூறி, உறுதிமொழி ஏற்றனர்.
மேலும், பள்ளி மாணவர்கள் பள்ளி முன்புறம் தலையில் ஹெல்மெட் அணிந்து அனைவரும் வாகனம் ஓட்ட வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரகுநாதன், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

