/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வங்கிகளில் நிரப்பப்படாத ஒரு லட்சம் பணியிடங்கள்! அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகி குற்றச்சாட்டு

ADDED : நவ 01, 2024 12:31 AM
கோவை: ''வங்கிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன,'' என, அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரம் சிந்தாமணி அரங்கில், தொழிற்சங்க பயிற்சி முகாம் நடந்தது. இதில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:
வங்கி என்பது, பொதுமக்களுக்கு சேவை செய்யத்தான். மக்களுக்கு சேவை செய்ய, வங்கிகளில் போதுமான பணியாளர்கள் இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, போதிய பணியாளர்கள் நியமிக்கவில்லை; பணி நியமனங்கள் குறைந்துள்ளன.
வங்கிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், வாடிக்கையாளர் சேவையில் பாதிப்பு ஏற்படுகிறது. டிபாசிட் தொகைக்கான வட்டி வகிதம் குறைந்துள்ளது. பண வீக்கத்தை விட, வட்டி விகிதம் அதிகமாக இருக்க வேண்டும். 'மினிமம் பேலன்ஸ்' இல்லையென்றால் அதற்கு ஒரு தொகை, நான்கு அல்லது ஐந்து முறை ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்தால் அதற்கு ஒரு தொகை, காசோலை புத்தகம் வாங்க ஒரு தொகை என பலவாறாக கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இது, வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்துகிறது.
பெரியளவில் கடன் வாங்கி, அதை செலுத்தாமல் இருப்பவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில், இதுபோல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் நிறுவனங்கள், பெரிய தொகை வாங்கி செலுத்தாத பட்டியல் உள்ளது. இப்பட்டியலை வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை, கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் மேற்கொண்டனர்.