/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு லுாம்... ஒரு ரூம் போதும் கைத்தறி பயிற்சி பெற்று கலக்கலாம்
/
ஒரு லுாம்... ஒரு ரூம் போதும் கைத்தறி பயிற்சி பெற்று கலக்கலாம்
ஒரு லுாம்... ஒரு ரூம் போதும் கைத்தறி பயிற்சி பெற்று கலக்கலாம்
ஒரு லுாம்... ஒரு ரூம் போதும் கைத்தறி பயிற்சி பெற்று கலக்கலாம்
ADDED : நவ 23, 2025 06:39 AM

கை த்தறி நெசவு ஓட்டம்... ஒரு காலத்தில் ஊர் முழுக்க கேட்ட சத்தம், நம் பல நகரங்களில் சத்தமின்றி நலிவடைந்து வருகிறது. இதற்கு புத்துயிர் அளிக்கும் வகையில், கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது, 'சில்க் வில்லேஜ்' கைத்தறி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.
இதில், ஐ.டி., உட்பட பல்வேறு வேலைகளை உதறிவிட்டு, நெசவு கற்றுக்கொள்ளும் பெண்களை காண முடிவதுதான் ஆச்சரியம்.
பத்துக்கு பத்து இடம் இருந்தால் போதும்; மத்திய அரசின் மானிய கடன் உதவியில் இயந்திரங்கள் கொள்முதல் பெற்று, வீட்டிலேயே தொழிலை துவங்கிவிட முடியும் என்கின்றனர், இங்குள்ள பயிற்சியாளர்கள்.
இங்கு, கால்மிதி, டேபிள் மேட், சேலை, டவல் போன்றவற்றை தயாரிப்பது மற்றும் டிசைனிங், இயற்கை மற்றும் செயற்கை டையிங், டெக்ஸ்டைல் துறை ஏ.ஐ., தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி மைய அலுவலர் சுகன்யா நம்மிடம் கூறியதாவது..
நெசவுடன் தொழில்நுட்பத்தை இணைத்து, முன்னே எடுத்துச் செல்வதே இம்மையத்தின் நோக்கம். பெண்கள் நெசவு பயிற்சி பெற்று வீட்டில் இருந்தே, தொழில் செய்ய முடியும். மத்திய அரசின் 45 நாட்கள் இலவச பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகிறது; பயிற்சிக்கு 13,500 ரூபாயும் வழங்கப்படுகிறது. நெசவு பயிற்சி பெற்றவர்கள் தொழில் துவங்க, மானியத்துடன் கடனும் வழங்கப்படுகிறது. இது தவிர, கட்டண முறை பயிற்சியும் உள்ளன.
இப்பயிற்சி பெற, முன் அனுபவம் அவசியம் இல்லை; யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். ஒரு மாதம் முதல், ஆறு மாதம் வரை பயிற்சிகள் உள்ளன. கல்லுாரி, வேலைக்கு செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள், ஆண்கள் என பலர் பயிற்சிக்காக வருகின்றனர்.
இவ்வாறு, சுகன்யா கூறினார்.
சென்னையில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஐ.டி., கம்பெனியில் பணி புரிந்து வந்தேன். நல்ல சம்பளம் என்றாலும்; பணியை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் துவங்க ஆசை. சேலைகள் மீது ஆர்வம் உண் டு; வெறுமனே சேலை விற்காமல் அதை பிரத்யேகமாக உருவாக்க பயிற்சி பெறுகிறேன். நுால் தரம் முதல் தயாரிப்பு வரை, அனைத்தும் கற்றுக்கொடுப்பதால் எளிதாக உள்ளது. - ஏஞ்சலின் பயிற்சி மாணவி

