UPDATED : அக் 23, 2026 12:41 AM
ADDED : அக் 23, 2026 12:36 AM
போத்தனூர்:
குனியமுத்தூர் அடுத்து சுண்ணாம்பு காளவாய் அருகே நேற்று முன்தினம் அரசு டவுன் பஸ் (தடம் எண்: 66), ஒன்று ஆத்துபாலம் நோக்கி வந்தது. எதிர்பாராவிதமாக பஸ் டிரைவர் மார்டினுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கினார். பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓடி, முன்னால் சென்ற ஒரு ஆட்டோ மீது மோதியது.
ஆட்டோ டிரைவர் நூர்முகமது வெளியே குதித்தபோது, பஸ்சில் சிக்கி பலியானார்.
நடந்து சென்ற சுண்ணாம்பு காளவாயை சேர்ந்த அப்பாஸ், 45 படுகாயமடைந்தார். மேலும் பஸ்சில் பயணித்த பெண் ஒருவரும் கீழே இறங்கியபோது, காயமடைந்தார். அங்கிருந்தோர் அனைவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் பஸ் டிரைவர் மார்டின் உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பாஸ், 45 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
