/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் டயரில் சிக்கி ஒருவர் பரிதாப பலி
/
பஸ் டயரில் சிக்கி ஒருவர் பரிதாப பலி
ADDED : ஆக 16, 2025 09:25 PM
கோவை; மேற்கு வங்க மாநிலம்,பிஸ்னுபூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் ராய்,35, கோவையில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வைசியாள் வீதி, அம்மன் கோவில் அருகே நடந்து சென்றார்.
அப்போது, அந்த வழியாக செல்வபுரம், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சுரேஷ்குமார்,45, ஸ்கூட்டியில் வேகமாக வந்து சஞ்சய் ராய் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி சஞ்சய் ரோய் ரோட்டில் விழுந்தார். அந்த நேரத்தில் அந்த வழியாக வேகமாக வந்த, தனியார் பஸ் சஞ்சய்ராய் மீது மோதியதில் தலைநசுங்கி பலியானார்.
மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து, ஸ்கூட்டியில் வந்த சுரேஷ்குமார், பஸ் டிரைவர் கார்த்திக்,25, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.