/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.30 ஆயிரம் திருட்டு; ஒருவர் சிறையிலடைப்பு
/
ரூ.30 ஆயிரம் திருட்டு; ஒருவர் சிறையிலடைப்பு
ADDED : ஆக 06, 2025 10:26 PM
கோவை; குனியமுத்துார் பி.கே.புதுரை சேர்ந்தவர் சுரேஷ், 35; தனியார் நிறுவன ஊழியர். அடகு வைத்த தனது மனைவியின் நகைகளை மீட்பதற்காக, கடந்த 4ம் தேதி வங்கி ஏ.டி.எம்., இருந்து ரூ.30 ஆயிரத்தை எடுத்தார்.
பணத்தை தனது பையில் வைத்து விட்டு, ராமநாதபுரத்தில் உள்ள பணிபுரியும் நிறுவனத்துக்கு சென்றார். சக ஊழியர் பிரபு அழைத்ததால், பையை கதவு அருகே வைத்து விட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது, பை மாயமாகியிருந்தது. சுரேஷ், ராமநாதபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரித்தனர்.
அதில், புலியகுளம், அம்மன்குளத்தை சேர்ந்த நாகார்ஜூன், 19 மற்றும் மூன்று சிறுவர்கள் பையை திருடிச் செல்வது தெரிந்தது. நாகார்ஜூனை சிறையில் அடைத்த போலீசார், மூன்று சிறுவர்களையும் சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.