/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வலிநிவாரணி மாத்திரை விற்ற இருவருக்கு சிறை
/
வலிநிவாரணி மாத்திரை விற்ற இருவருக்கு சிறை
ADDED : ஆக 06, 2025 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடாகம் ரோடு பால் கம்பெனி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருவர் நின்றிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர்.
நைட்ராசெபம், 20, கஞ்சா உள்ளிட்டவை இருந்தன. விசாரணையில் அவர்கள், கோவை தியாகராயா புதுவீதியை சேர்ந்த மகேந்திரா, 29, காட்டூர் டாக்டர் ராஜரத்தினம் வீதியை சேர்ந்த கிருஷ்ணமாதவ் குமார், 23 எனத் தெரிந்தது. அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர். 20 நைட்ராசெபம் மாத்திரைகள், 110 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.