/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் குழாயில் உடைப்பு; வடிகால் வாரியம் சீரமைப்பு
/
குடிநீர் குழாயில் உடைப்பு; வடிகால் வாரியம் சீரமைப்பு
குடிநீர் குழாயில் உடைப்பு; வடிகால் வாரியம் சீரமைப்பு
குடிநீர் குழாயில் உடைப்பு; வடிகால் வாரியம் சீரமைப்பு
ADDED : ஆக 06, 2025 10:25 PM

தொண்டாமுத்தூர்; மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், காளம்பாளையம் முதல் மாதம்பட்டி வரையிலான, சிறுவாணி மெயின் ரோட்டை, நான்கு வழியாக அகலப்படுத்தும் பணி, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக, சாலையோரத்தில் உள்ள மரங்கள், ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியால் அகற்றப்படுகிறது. காளம்பாளையம், புதுரோடு பிரிவு, சிறுவாணி மெயின் ரோட்டில், ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் மரத்தை அகற்றும்போது, குறிச்சி - குனியமுத்தூர் பகுதிக்கு, குடிநீர் கொண்டு செல்லும், 500 மி.மீ., விட்டமுள்ள சிறுவாணி குழாயில், உடைப்பு ஏற்பட்டது.
லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர், சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரியத்தினர், சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், பம்பிங் செய்வதை நிறுத்தி, உடைப்பு ஏற்பட்ட குழாயில், உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.