ADDED : ஜன 09, 2025 11:39 PM
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே, ஒக்கிலிபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 35. இவர், பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்றுமுன்தினம், மாலை, நஞ்சேகவுண்டன்புதுார் பஸ் ஸ்டாப்பில் இருந்து, கோவை - பொள்ளாச்சி இடையிலான ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது, ரோட்டில் வந்த கார், அவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக, அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, உயர்சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், கோவை துடியலுாரைச் சேர்ந்த அம்பரீஷ்கண்ணா என்பவர், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

