/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மது போதையில் பவானி ஆற்றில் இறங்க கூடாது'
/
'மது போதையில் பவானி ஆற்றில் இறங்க கூடாது'
ADDED : ஏப் 23, 2025 10:57 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் அபத்தான பகுதிகள் என 19 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மேட்டுப்பாளையம் போலீசாரின் லைப் கார்ட்ஸ் பிரிவினர் ரோந்து மேற்கொண்டு, அங்கு குளிப்பவர்களை அப்புறப்படுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வருகின்றனர்.
இதனிடையே போலீசார் இல்லாத நேரத்தில், வெளி மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள், கோவில்களுக்கு வரும் பக்தர்கள் சிலர் பவானி ஆற்றில் குளிக்கின்றனர். இதில் சிலர் மது போதையில் பவானி ஆற்றில் இறங்கி குளிப்பதால், ஆழமான பகுதிகளுக்கு சென்று மாட்டிக் கொள்கின்றனர்.
அண்மையில், திருப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தேக்கம்பட்டி செல்லும் வழியில் உள்ள பவானி ஆற்றில் மதுபோதையில் குளிக்க இறங்கி, ஆழமான பகுதிக்கு சென்று, அங்கிருந்து நீந்தி கரைக்கு வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மதுபோதையில் அத்துமீறி பவானி ஆற்றில் குளிக்க இறங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
மேட்டுப்பாளையம், ஏப். 24--
மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் உள்ள, மகா சக்தி மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இக்கோவிலில் கடந்த எட்டாம் தேதி, திருவிழா பூச்சாட்டு நடந்தது. 15ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. 20ம் தேதி ராஜபுரம் ஊர் பொதுமக்கள் கரகம், பூச்சட்டி எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அன்று இரவு ராஜா மகா சக்தி வள்ளிக்கும்மி குழுவினரின் அரங்கேற்ற நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில் நடந்தது.
நேற்றுக் காலை பஸ் ஸ்டாண்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பெண்கள் பால்குடங்களை கோவிலுக்கு எடுத்து வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலை, அர்ச்சகர் மகா சக்தி மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரமும், பூஜையும் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். இன்று மஞ்சள் நீராட்டும், நாளை மறுபூஜையும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.