/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஒரு மாணவன் - ஒரு விவசாய குடும்பம்' : வேளாண் பல்கலையில் திட்டம் துவக்கம்
/
'ஒரு மாணவன் - ஒரு விவசாய குடும்பம்' : வேளாண் பல்கலையில் திட்டம் துவக்கம்
'ஒரு மாணவன் - ஒரு விவசாய குடும்பம்' : வேளாண் பல்கலையில் திட்டம் துவக்கம்
'ஒரு மாணவன் - ஒரு விவசாய குடும்பம்' : வேளாண் பல்கலையில் திட்டம் துவக்கம்
ADDED : ஜன 04, 2024 12:26 AM
கோவை, : தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முதன்முறையாக, 'ஒரு மாணவன் - ஒரு விவசாய குடும்பம்' என்ற திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் கீதாலட்சுமி திட்டத்தை துவக்கிவைத்தார்.
இப்பல்கலையின் கீழ், 18 உறுப்பு கல்லுாரிகள், 40 ஆராய்ச்சி நிலையங்கள், 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் செயல்படுகின்றன. மாநிலம் முழுவதும், பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்பு கல்லுாரிகளில் முதலாமாண்டு சேர்க்கை புரிந்த, 2,395 மாணவர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய குடும்பத்துடன், நான்கு ஆண்டுகள் தொடர்பில் இருப்பார்கள். விவசாயிகளின் நிலை, களத்தில் ஏற்படும் சிக்கல்கள், நோய் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு போன்ற அனைத்தையும், மாணவர்கள் நேரடியாக கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தவிர, மாணவர்கள் வாயிலாக, விவசாயிகளும் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:
மாணவர்கள் பலர், நகர் பகுதிகளில் இருந்து வேளாண் பிரிவுகளில் படிக்க வருகின்றனர். இவர்கள் கிராமிய சூழல், விவசாயிகளின் சிரமங்கள், வேளாண் சார்ந்த அடிப்படைகளை அறிந்துகொள்ளும் வகையிலும், அதே சமயம் விவசாயிகள் மாணவர்கள் வாயிலாக உடனுக்குடன் உதவிகள், வழிகாட்டுதல்கள் பெறும் வகையிலும், திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
4 மாணவர்களுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்களின் கல்லுாரி அமைவிடத்தில் இருந்து, 20 முதல் 30 கி.மீ., தொலைவுக்குள், விவசாய குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் வாயிலாக, 2.395 விவசாய குடும்பங்களுக்கு மாணவர்கள் வாயிலாக, விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல் கிடைக்கும்.
மாணவர்களும் விவசாயிகளின் குறைபாடுகள் என்ன என்பதை அறிந்து, அதற்கு தீர்வு காணும் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இந்நிகழ்வில், வேளாண் கல்லுாரி ஆராய்ச்சி நிலைய டீன் வெங்கடேச பழனிசாமி, பொறியியல் கல்லுாரி டீன் ரவிராஜ், விரிவாக்க கல்வி இயக்கக இயக்குனர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.