/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே ஒரு வழி சிறப்பு ரயில்
/
எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே ஒரு வழி சிறப்பு ரயில்
எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே ஒரு வழி சிறப்பு ரயில்
எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே ஒரு வழி சிறப்பு ரயில்
ADDED : ஏப் 14, 2025 11:07 PM
கோவை; பயணிகளின் வசதிக்காக போத்தனுார் வழியாக, எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே, ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன்(06061) சிறப்பு ரயில், எர்ணாகுளத்தில் இருந்து நாளை மாலை 6:05 மணிக்கு புறப்பட்டு, வரும் வெள்ளி இரவு 8:35 மணிக்கு ஹஸ்ரத் நிஜாமுதீன் சென்றடையும்.
சிறப்பு ரயிலில், 20 படுக்கை வசதி பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான இரு சிறப்பு பெட்டிகள், இணைக்கப்பட்டிருக்கும். ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடுர், ஓங்கல், விஜயவாடா, வாராங்கல், பால்ஹார்சா, நாக்பூர், இட்ரசி, போபால், பினா, ஜான்சி, குவாலியர், ஆக்ரா கன்டோன்மென்ட், மதுரா ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில், இந்த ரயில் நின்று செல்லும். சிறப்பு ரயில் போத்தனுாருக்கு, இரவு 11:00 மணிக்கு வந்து, 11:02 மணிக்கு புறப்படும்.