/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகை திருடியவருக்கு ஓராண்டு சிறை
/
நகை திருடியவருக்கு ஓராண்டு சிறை
ADDED : மே 15, 2025 11:37 PM
கோவை; கோவை, சவுரிபாளையம் மீனா எஸ்டேட் பகுதி யில் வசித்து வருபவர் நிர்மல்குமார்.
இவர் தனது வீட்டில் வைத்திருந்த, 28 சவரன் தங்க நகை திருட்டு போனதாக பீளமேடு போலீசில் புகார் தெரிவித்தார்.
போலீஸ் விசாரணையில், 'நிர்மல் குமார் வீட்டிற்கு பெயின்ட் அடிக்க வந்த புலியகுளத்தை சேர்ந்த முருகன்,40, என்பவர் திருடி சென்று, நகைகளை தனியார் வங்கியில் அடமானம் வைத்தது தெரிய வந்தது. முருகனை கைது செய்த போலீசார், வங்கியிலிருந்து நகையை மீட்டனர். கோவை, ஜே.எம்:2, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
விசாரித்த மாஜிஸ்திரேட் அப்துல்ரகுமான், குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு, ஓராண்டுசிறை, 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் மலர்கொடி ஆஜரானார்.