/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்ன வெங்காயம் விலை குறைகிறது
/
சின்ன வெங்காயம் விலை குறைகிறது
ADDED : ஜன 25, 2024 12:02 AM
உடுமலை : உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட்டுக்கு ஒரே நேரத்தில், புதிய வெங்காயம் அதிகமாக வர துவங்கியுள்ளதால், சின்ன வெங்காயம் விலை குறைய துவங்கியுள்ளது.
சமையலில் காய்கறிகளில் அதிக தேவையாக உள்ளது சின்னவெங்காயம். குறிப்பாக, சாம்பாரில் இதன் பங்கு முக்கியமானது. தற்போது இதன் விலை குறைந்து வருகிறது.
பொங்கலுக்கு முன் சின்ன வெங்காயம் கிலோ, 45 முதல், 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வானிலையில் இயல்பு திரும்பியுள்ளது. பட்டறைகளில் இருப்பு வைத்த வெங்காயத்தை, விவசாயிகள் பலர் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
பொங்கல் விடுமுறை முடிந்த பின், சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்த நிலையில், வெளியூர்களில் இருந்து, காய்கறி மார்க்கெட்டுக்கும் வெங்காயம் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால், வெங்காயம் விலை தொடர்ந்து குறைய துவங்கியுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில், சில்லறை விலையில் சின்ன வெங்காயம், 40 ரூபாய்க்கும், மொத்த விலையில், 2.5 கிலோ, 100 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் விற்கப்பட்டது.
இரண்டு மாதங்களாக தொடர்ந்த சின்ன வெங்காயம் விலை, தற்போது குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இது தொடர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.