/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு ஐ.டி.ஐ.,யில் பயிற்சியாளர்கள் சேர்க்கை இணையத்தில் துவக்கம்
/
அரசு ஐ.டி.ஐ.,யில் பயிற்சியாளர்கள் சேர்க்கை இணையத்தில் துவக்கம்
அரசு ஐ.டி.ஐ.,யில் பயிற்சியாளர்கள் சேர்க்கை இணையத்தில் துவக்கம்
அரசு ஐ.டி.ஐ.,யில் பயிற்சியாளர்கள் சேர்க்கை இணையத்தில் துவக்கம்
ADDED : மே 21, 2025 11:46 PM
பெ.நா.பாளையம்; கோவை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) நடப்பு ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை, இணையதளம் வழியாக விண்ணப்பம் பெறுவது துவக்கப்பட்டுள்ளது.
ஐ.டி.ஐ., பயிற்சியில் சேர்வதற்கான கல்வி தகுதி, 8ம் வகுப்பு அல்லது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கு, 14 முதல், 40 வயது வரையும், பெண்களுக்கு உச்ச வயதுவரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
கோவை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் இந்திய அரசால் சிறந்த தொழிற் பயிற்சி நிலையமாக தேர்வு செய்யப்பட்டு, மாதிரி ஐ.டி.ஐ., யாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இங்கு எலக்ட்ரீசியன், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில் பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. இங்கு பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பாட புத்தகங்கள், இலவச பஸ் பயண அடையாள அட்டை, சீருடை, காலணிகள், மாதாந்திர உதவித்தொகை 750 ரூபாய், தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் தகுதியான பயிற்சியாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பயிற்சி முடியும் நிலையில் கோவையில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு, அதே நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
வெளியூரிலிருந்து பயிற்சியில் சேரும் ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி வழங்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு 88254 34331 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.