ADDED : ஏப் 09, 2025 12:37 AM
அ நிறம் | அளவு
போத்தனூர்; கோவை, போத்தனூர் போலீஸ் எஸ்.ஐ.,ராமர், நேற்று முன்தினம் போலீசாருடன், நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரோந்து சென்றார். மேம்பாலத்தின் கீழே, சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் உட்கார்ந்திருந்தனர்.
விசாரணையில், அவர்கள் சுந்தராபுரம் அடுத்து பிள்ளையார்புரம், கஸ்தூரி கார்டனை சேர்ந்த அஸ்ரப் அலி, 48, கரும்புக்கடை இலாஹி நகரை சேர்ந்த இப்ராஹிம், 50 என்பது தெரிந்தது.
இருவரும் ஆன்லைன் வாயிலாக, லாட்டரி விற்பனை செய்வதும், அதற்காக இரு நோட்டு புத்தகங்கள், நான்கு மொபைல்போன்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அப்பொருட்கள் மற்றும் பைக்குடன், இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதில் இப்ராஹிம், கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
