/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடந்தாண்டு நடந்த திருட்டுகளில் 55 சதவீதம் மட்டுமே கண்டுபிடிப்பு
/
கடந்தாண்டு நடந்த திருட்டுகளில் 55 சதவீதம் மட்டுமே கண்டுபிடிப்பு
கடந்தாண்டு நடந்த திருட்டுகளில் 55 சதவீதம் மட்டுமே கண்டுபிடிப்பு
கடந்தாண்டு நடந்த திருட்டுகளில் 55 சதவீதம் மட்டுமே கண்டுபிடிப்பு
ADDED : ஜன 08, 2025 11:47 PM

கோவை: கோவை மாநகர பகுதிகளில், கடந்த ஆண்டு நடந்த திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் போலீசார், 55 சதவீத வழக்குகளில் மட்டுமே, குற்றவாளிகளை கண்டு பிடித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
2024ம் ஆண்டு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கொள்ளை, திருட்டு உள்ளிட்ட 1281 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் வெறும், 714 (55 சதவீதம்) வழக்குகளில் மட்டுமே குற்ற வாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
2023ம் ஆண்டு 1419 சம்பவங்களில் 808 (57 சதவீதம்) வழக்குகளில், குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். 2023ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு 2 சதவீதம் குறைவு.
இதில், ரூ.7.82 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து ரூ.5.89 கோடி மீட்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு ஏற்பட்ட 14.78 கோடியில் இருந்து, ரூ.10.24 கோடி மீட்கப்பட்டுள்ளது.