/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
3 கோர்ட்டுகளுக்கு ஒரே ஒரு நீதிபதி
/
3 கோர்ட்டுகளுக்கு ஒரே ஒரு நீதிபதி
ADDED : ஆக 13, 2025 09:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், கூடுதலாக மாவட்ட செஷன்ஸ் அந்தஸ்தில், இரண்டு எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு கோர்ட்டுக்கும், தலா 1,200 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளது. முதல் கோர்ட்டுக்கு நீதிபதி நாராயணன், இரண்டாவது கோர்ட்டுக்கு நீதிபதி சுந்தர்ராஜ் நியமிக்கப்பட்டனர்.
மகளிர் கோர்ட் நீதிபதிகளுக்கு,போக்சோ கோர்ட் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், நீதிபதி சுந்தர்ராஜ் இப்போது மகளிர், எம்.சி.ஓ.பி., போக்சோ ஆகிய மூன்று கோர்ட்டுகளில் பணியாற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.