/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம உதவியாளர் காலியிடம் 16; நியமிப்பதோ வெறும் ஏழு தான்
/
கிராம உதவியாளர் காலியிடம் 16; நியமிப்பதோ வெறும் ஏழு தான்
கிராம உதவியாளர் காலியிடம் 16; நியமிப்பதோ வெறும் ஏழு தான்
கிராம உதவியாளர் காலியிடம் 16; நியமிப்பதோ வெறும் ஏழு தான்
ADDED : ஆக 04, 2025 08:52 PM
அன்னுார்; அன்னுார் தாலுகாவில், 16 வருவாய் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தும், ஏழுக்கு மட்டும் விண்ணப்பம் பெறப்படுகிறது.
அன்னுார் தாலுகாவில், அன்னுார் தெற்கு, வடக்கு, எஸ்.எஸ்.குளம் என மூன்று உள் வட்டங்கள் உள்ளன. 30 வருவாய் கிராமங்கள் உள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, அன்னுார், எஸ்.எஸ்.குளம்., மசக்கவுண்டன் செட்டிபாளையம் உள்ளிட்ட பெரிய வருவாய் கிராமங்களில், மூன்று கிராம உதவியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
பணியிலிருந்து, ஓய்வு, இறப்பு, ஆகியவற்றால், ஒரு வருவாய் கிராமத்துக்கு, ஒரு கிராம உதவியாளர் மட்டுமே பணியில் இருந்தனர். இந்நிலையில் சில ஆண்டுகளாக அன்னுார் தாலுகாவில் 16 வருவாய் கிராமங்களில், கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளன.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அழைப்பு விடுத்துள்ளது. இதில் குப்பனுார், வடக்கலூர், பிள்ளையப்பம்பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், காட்டம்பட்டி, கீரணத்தம், கொண்டையம்பாளையம் ஆகிய ஏழு வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர ஒன்பது வருவாய் கிராமங்களில் பல ஆண்டுகளாக கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'கிராம நிர்வாக அலுவலர் பணி காரணமாக வெளியில் சென்று விட்டால் கிராம உதவியாளர் நமக்கு தேவையான விவரங்களை தெரிவித்து உதவி செய்து வந்தார்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல வருவாய் கிராமங்களில் கிராம உதவியாளர்கள் இல்லை. இதனால் கிராம நிர்வாக அலுவலர் வெளியில் செல்லும்போது அலுவலகத்தை பூட்டி விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு காலியாக உள்ள அனைத்து பணியிடங்களிலும் கிராம உதவியாளர்களை நியமிக்க வேண்டும் ,' என்றனர்.