ADDED : பிப் 24, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, குன்னுார் வழியாக ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது.
ஊட்டி மலை ரயில் இன்ஜின் மற்றும் பெட்டிகள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி, சமீபத்தில், மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, ஊட்டி மலை ரயில் பெட்டி ஒன்று திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு, லாரி வாயிலாக கொண்டு செல்லப்பட்டது. தற்போது பராமரிப்பு முடிந்து, அந்த ரயில் பெட்டி மீண்டும் மேட்டுப்பாளையம் வந்தடைந்தது. வேறொரு பெட்டி பராமரிப்புக்கு கொண்டு செல்லப்பட்டது.-----
