/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒப்பணக்கார வீதி நெரிசல் பஸ்களுக்கு மாற்று பாதை
/
ஒப்பணக்கார வீதி நெரிசல் பஸ்களுக்கு மாற்று பாதை
ADDED : டிச 12, 2025 05:01 AM
கோவை: கோவை, ஒப்பணக்கார வீதியில் எப்போதும் நெரிசலாக இருக்கிறது. எனவே, நாளை முதல் காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டில் இருந்து உக்கடம், பாலக்காடு, வழியாக கேரளா செல்லும் கேரள அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் காந்திபுரம், ஆர்.வி. ரவுண்டானா, மகளிர் பாலிடெக்னிக், மணீஸ் பள்ளி, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, காமராஜர் ரோடு, சுங்கம் ரவுண்டானா, வாலாங்குளம், உக்கடம் வழியாக செல்ல வேண்டும்.
கேரளாவில் இருந்து காந்திபுரம் வரும் கேரள அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உக்கடம், வாலாங்குளம், சுங்கம் ரவுண்டானா, காமராஜர் ரோடு, அண்ணா சிலை, மகளிர் பாலிடெனிக், ஆர்.வி., ரவுண்டானா, வழியாக செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

