/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்தவெளியில் குப்பை குவிப்பு; திடக்கழிவு மேலாண்மை என்னாச்சு
/
திறந்தவெளியில் குப்பை குவிப்பு; திடக்கழிவு மேலாண்மை என்னாச்சு
திறந்தவெளியில் குப்பை குவிப்பு; திடக்கழிவு மேலாண்மை என்னாச்சு
திறந்தவெளியில் குப்பை குவிப்பு; திடக்கழிவு மேலாண்மை என்னாச்சு
ADDED : மார் 13, 2024 11:37 PM
பொள்ளாச்சி : சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பகுதியில், குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பையை துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திடக்கழிவுகளை அப்புறப்படுத்த நிர்வாகக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.
வீடுகள் தோறும் சேவை வரி வசூலிக்கப்படுகிறது. தனி நபர் குடியிருப்புகளுக்கு சொத்து வரிக்கு ஏற்ப, ஆண்டுக்கு, 120 முதல், 600 ரூபாய் வரை சேவை வரி வசூலிக்கப்படுகிறது.
இதனால், குடியிருப்புவாசிகள் திறந்த வெளியில் குப்பைக் கொட்டுவதை தவிர்த்து, அவைகளே தரம் பிரித்து அளிக்குமாறு, பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
இருப்பினும், மக்களிடையே விழிப்புணர்வு இன்மை, அலட்சியம் போன்ற காரணங்களால், குப்பையை பிரித்து கையாள்வதில்லை. துாய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்காமல், திறந்தவெளியில் குவிக்கின்றனர். இந்நிலையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
மக்கள் கூறியதாவது:
குப்பையை தரம் பிரித்து அளிப்பதும், அவற்றை மறுசுழற்சி செய்ய வேண்டும். ஆனால், வீடுகளில் சேகரமாகும் குப்பை, துாய்மைப் பணியாளர்களிடம் தரம் பிரித்து அளிக்கப்படுவதில்லை.
சிலர், திறந்தவெளியில் குப்பையை வீசுகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் குப்பை தேக்கமடைந்து, சுகாதாரம் பாதிக்கிறது. திறந்தவெளியில் குப்பை கொட்டினால், அதிக தொகை அபராதம் விதிக்க வேண்டும்.
தன்னார்வலர்களை பணியமர்த்தி, வீடுகள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர் வழங்கப்படுகிறது. இதனையும் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.

