/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்து கிடக்கும் மின்பெட்டி; கைக்கு எட்டும் தொலைவில் ஆபத்து
/
திறந்து கிடக்கும் மின்பெட்டி; கைக்கு எட்டும் தொலைவில் ஆபத்து
திறந்து கிடக்கும் மின்பெட்டி; கைக்கு எட்டும் தொலைவில் ஆபத்து
திறந்து கிடக்கும் மின்பெட்டி; கைக்கு எட்டும் தொலைவில் ஆபத்து
ADDED : ஏப் 14, 2025 05:32 AM

வீணாகும் தண்ணீர்
கிணத்துக்கடவு பெரியார் நகர், நான்காவது வீதியில், சாலையோரம் குழாயில் கசிவு ஏற்பட்டு, தண்ணீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால், அவ்வழியில் நடந்து செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
--- ராம், கிணத்துக்கடவு.
ரோட்டில் கழிவு குவிப்பு
பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு தனியார் பெட்ரோல் பங்க் அருகே, ஜோதி நகர் செல்லும் ரோட்டில் கோழி இறைச்சி கழிவை சிலர் கொட்டிச்செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், அவ்வழியாக செல்பவர்கள் பாதிக்கின்றனர். அங்கு கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும்.
--- டேவிட், பொள்ளாச்சி.
வேகத்தடை தெரியவில்லை
கிணத்துக்கடவில் இருந்து, நல்லட்டிபாளையம், பட்டணம் செல்லும் வழியில் உள்ள வேகத்தடை, இரவு நேர வாகனத்தில் வருபவர்களுக்கு சரியாக தெரிவதில்லை. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் உள்ள வேகதடைகளில் வாகன ஓட்டுநர்கள் கண்களுக்கு தெரியும் வகையில் மஞ்சள் அல்லது வெள்ளை நிற பெயின்ட் அடிக்க வேண்டும்.
-- கணேஷ், நல்லட்டிபாளையம்.
ரோட்டின் நடுவே கல்
சூளேல்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, விநாயகா கார்டனில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியின் போது, எச்சரிக்கைக்காக நடப்பட்ட கல், பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக கல்லை அகற்றி, ரோட்டை சீரமைக்க வேண்டும்.
-- நரி முருகன், பொள்ளாச்சி.
பழுதடையும் மின் பெட்டி
கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் செல்லும் வழியில் உள்ள மின்கம்பத்தில், மின் பெட்டி துருப்பிடித்து சேதமடைந்த நிலையில் உள்ளது. மழை நேரத்தில் மின் ஒயர்கள் பழுதாகும் வாய்ப்புள்ளது. எனவே, மின் பெட்டியை சீரமைத்து, மூடி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வெற்றிவேல், கிணத்துக்கடவு.
நடைபாதையில் வாகனங்கள்
உடுமலை, வ.உ.சி., வீதியில் வாகனங்கள் நடைபாதையில் நிறுத்தப்படுகின்றன. பொதுமக்கள் நடப்பதற்கு வழியில்லாமல் வணிக கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. இதனால் மக்கள் வாகன நெரிசலுக்கு நடுவில் நடந்துசெல்ல வேண்டியுள்ளது. வாகனங்கள் அதிவேகமாக வரும் நேரங்களில் ரோட்டில் செல்வோர் மீதும் மோதி விபத்துக்குள்ளாக்குகின்றனர்.
- ஜெயந்தி, உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, மீர் கவுஸ் காலனியில் பத்து நாட்களுக்கும் மேலாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. அப்பகுதியில் மாலை நேரங்களில் இருள் சூழ்ந்திருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், முதியவர்கள் வெளியில் சென்று வருவதற்கும் சிரமப்படுகின்றனர். திருட்டு பயமும் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துக்குள்ளாகின்றனர்.
- ராஜா, உடுமலை.
செயல்படாத தானியங்கி சிக்னல்
உடுமலை தளி ரோடு மேம்பாலம் ஏறும் இடத்தில் வேகத்தை கட்டுப்படுத்தும் தானியங்கி சிக்னல் மற்றும் மின் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்பையா, உடுமலை.
'குடி' மகன்கள் தொல்லை
உடுமலை, பார்க் ரோட்டில் காலை நேரத்திலும் 'குடி'மகன்கள் உலா வருகின்றனர். அவ்வழியாக செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். விடுமுறை நாட்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாததால், அங்கு குடியிருக்கும் மக்களும் வெளியில் சென்று வருவதற்கு அச்சப்படுகின்றனர்.
- பானு, உடுமலை.
நுாலக தரை தளம் சேதம்
உடுமலை காந்திநகரில் கிளை நுாலகம் 3 அமைந்துள்ளது. இந்நுாலகத்தில் தரை தளம் சேதமடைந்துள்ளது. இதனால் இங்கு வரும் வாசகர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதை நுாலகத்துறையினர் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சோமு, உடுமலை.

