/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று தளங்களுடன் திறந்தாச்சு ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன்
/
மூன்று தளங்களுடன் திறந்தாச்சு ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன்
மூன்று தளங்களுடன் திறந்தாச்சு ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன்
மூன்று தளங்களுடன் திறந்தாச்சு ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன்
ADDED : பிப் 22, 2024 06:03 AM

கோவை: கோவை ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனுக்கான புதிய கட்டடத்தை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
கோவை ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனுக்கான புதிய கட்டடம், சம்பத் வீதி ஜி.வி.ராமசாமி ரோட்டில் ரூ.2.21 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ''-இப்புதிய கட்டடம், 15 சென்ட் நிலத்தில், 12 ஆயிரத்து 500 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இது மூன்று தளங்கள் கொண்டதாகும். இதன் மாடியில் கூட்ட அரங்கமும் உள்ளது. மூன்று தளத்துக்கும் லிப்ட் வசதி உள்ளது,'' என்றார்.
திறப்பு விழாவில், துணை போலீஸ் கமிஷனர் ரோகித்நாதன், உதவி போலீஸ் கமிஷனர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.