/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஓபன்' டேபிள் டென்னிஸ் போட்டி 5வது முறையாக 'அசத்தல் சாம்பியன்'
/
'ஓபன்' டேபிள் டென்னிஸ் போட்டி 5வது முறையாக 'அசத்தல் சாம்பியன்'
'ஓபன்' டேபிள் டென்னிஸ் போட்டி 5வது முறையாக 'அசத்தல் சாம்பியன்'
'ஓபன்' டேபிள் டென்னிஸ் போட்டி 5வது முறையாக 'அசத்தல் சாம்பியன்'
ADDED : ஜூன் 06, 2025 05:59 AM
கோவை; மாவட்ட அளவிலான 'ஓபன்' பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டி சரவணம்பட்டியில் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த காலியிறுதியில் அலீம், 11-7, 11-8 என்ற புள்ளிகளில் சேகரை வென்றார். தொடர்ந்து, நிஷ்சித், 11-4, 11-6 என்ற புள்ளிகளில் ராஜாவையும், தினேஷ் கிருஷ்ணா, 12-10, 11-9 என்ற புள்ளிகளில் செல்வத்தையும், சங்கர், 11-7, 11-9 என்ற புள்ளிகளில் பிரஜித்தையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறினர்.
முதல் அரையிறுதியில் தினேஷ் கிருஷ்ணா, 8-11, 11-7, 11-5, 5-11, 11-9 என்ற புள்ளிகளில் நிஷ்சித்தையும், இரண்டாம் அரையிறுதியில் சங்கர், 11-7, 9-11, 11-8, 11-7 ஆகிய புள்ளிகளில் அலீமையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பரபரப்பான இறுதிப்போட்டியில் சங்கர், 11-4, 11-2, 11-4 என்ற புள்ளிகளில் தினேஷ் கிருஷ்ணாவை வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.