/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை படியை திறக்கணும்!
/
ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை படியை திறக்கணும்!
ADDED : பிப் 12, 2024 11:38 PM
பொள்ளாச்சி:'பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தின் அருகில் மூடப்பட்டுள்ள நடைமேடைக்கு செல்லும் படியை, பயணியர் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும்,' என, ரயில் பயணியர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், மத்திய அரசின் 'அமிர்த் பாரத்' திட்டத்தின் கீழ், பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வாகன நிறுத்துமிடம் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஸ்டேஷனுக்குள் பயணிகள் நுழையும்பகுதி, மேற்கு புறமாக மாற்றியமைக்கப்பட்டதால் இருசக்கர வாகனத்தில் வருவோர், அதிக துாரம் ரயிலை பிடிக்க நடக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து,பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், பயணியரிடம் கையெழுத்து பெற்று ரயில்வே ஸ்டேஷன் மேலாளரிடம் மனு கொடுத்தனர்.
ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'தற்போதுள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தின் அருகில் மூடப்பட்டுள்ள நடைமேடைக்கு செல்லும் படிக்கட்டை பயன்பாட்டுக்கு திறந்து விட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதாக, ஸ்டேஷன் மேலாளர் உறுதி அளித்தார்,' என்றனர்.