ADDED : நவ 17, 2025 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி, வ.உ.சி., நகர் அருகே வள்ளுவர் நகரவை துவக்கப்பள்ளி உள்ளது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக, பள்ளியில் அண்ணாதுரை நூலகம் புதிதாக திறக்கப்பட்டது.
விழாவுக்கு நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் அமுதா நூலகத்தை திறந்து வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை பேபி எஸ்தர் வரவேற்றார். நூலகம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை ஜெயராமன், மேற்கொண்டார்.
விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். அசன் பாவா, வினோத், மன்சூர் ஆகியோர் நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இடைநிலை ஆசிரியர் நிசார் நன்றி கூறி னார்.

