/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணியில் 20 செ.மீ., உயரத்துக்கு மதகு திறப்பு
/
சிறுவாணியில் 20 செ.மீ., உயரத்துக்கு மதகு திறப்பு
ADDED : ஜூன் 26, 2025 11:37 PM
கோவைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை அமைந்துள்ள, மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், மீண்டும் பருவ மழை பெய்யத் துவங்கியுள்ளது.
அதனால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. முத்திக்குளம், பாம்பாறு, பட்டியாறு உள்ளிட்ட அருவிகளில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. அதனால், நீர் மட்டம் வெகுவாக உயர்கிறது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 48 மி.மீ., அடிவாரத்தில், 60 மி.மீ., மழை பதிவானது. இதனால், 42.64 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில், 2.07 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
மழை தொடர்வதாலும், அருவிகளில் இருந்து நீர் வரத்து காணப்படுவதாலும், 20 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, 9.40 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு, சப்ளை செய்யப்பட்டது.
மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு:பீளமேடு - 3.60 மி.மீ., வேளாண் பல்கலை - 5.30, பில்லுார் அணை - 5, கோவை தெற்கு - 6.20, வாரப்பட்டி - 7, தொண்டாமுத்துார் - 36, மதுக்கரை - 7.50, போத்தனுார் - 9, பொள்ளாச்சி - 68, மாக்கினாம்பட்டி - 44.40, கிணத்துக்கடவு - 25, ஆனைமலை - 24, சின்கோனா - 116, சின்னக்கல்லார் - 119, வால்பாறை - 94, சோலையார் - 175 மி.மீ., பதிவாகியுள்ளது.