/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமுதாய சுகாதார வளாகங்கள் திறப்பு
/
சமுதாய சுகாதார வளாகங்கள் திறப்பு
ADDED : ஜன 02, 2025 10:27 PM
அன்னுார்; பிள்ளையப்பம்பாளையத்தில் சமுதாய கழிப்பறை வளாகங்கள் திறக்கப்பட்டன.
பதினைந்தாவது நிதிக்குழு மானியத்தில் இருந்து, பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சியில், தலா ஆறு லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், தொட்டியனுார் மற்றும் தொட்டியனுார் ஏ.டி. காலனியில், சமுதாய கழிப்பறை வளாகங்கள் கட்டப்பட்டன. இரு பாலரும் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட இந்த வளாகத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
ஊராட்சித் தலைவர் லட்சுமண மூர்த்தி திறந்து வைத்தார். துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இத்துடன் பிள்ளையப்பம்பாளையத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பழுதுபார்க்கப்பட்டு நேற்று பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

