/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையம் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
/
மேட்டுப்பாளையம் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
மேட்டுப்பாளையம் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
மேட்டுப்பாளையம் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
ADDED : அக் 15, 2024 11:55 PM
மேட்டுப்பாளையம் : வடகிழக்கு பருவமழையை அடுத்து, மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
நகராட்சி கமிஷனர் அமுதா கூறியதாவது:
வடகிழக்கு பருவ மழையினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு, 0425 4-222151 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகராட்சி அலுவலர்கள், தீயணைப்புத்துறையினர், மின்வாரிய அலுவலர்கள், போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறை துறையினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஒன்றிணைந்து, வெள்ள நிவாரண குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, மழையால் சேதம் ஏதேனும் இருப்பின், உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பவானி ஆற்றில் தண்ணீர் செந்நிறத்தில் வருவதால், தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். வீடுகளில் தண்ணீரை தேக்கி வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். மழை நின்றவுடன் வீடுகளின் முன் தேங்கியுள்ள, மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். மக்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து, குப்பைகளை தரம் பிரித்து, துாய்மைப் பணியாளிடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, கமிஷனர் கூறினார்.