/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு
/
புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு
ADDED : டிச 26, 2024 11:29 PM
அன்னுார்; வடக்கலூரில் புதிய ரேஷன் கடை கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தது.
வடக்கலூர், கரியாகவுண்டனுார் ஆகிய இரண்டு ஊர்களிலும் உள்ள 980 ரேஷன் கார்டுதாரர்களுக்கான ரேஷன் கடை, கரியாகவுண்டனுாரில், சிறிய வாடகை கட்டிடத்தில், பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரேஷன் கடைக்கு, வடக்கலூர் சுப்பிரமணியா நகரில் புதிய கட்டடம் கட்ட 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற கட்டுமான பணி முடிவடைந்து, ரேஷன் கடை புதிய கட்டடத்தில் செயல்பட துவங்கியது.
ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். ஊராட்சித் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

