/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணியில் மதகு திறப்பு நான்கு அடி தண்ணீர் குறைப்பு
/
சிறுவாணியில் மதகு திறப்பு நான்கு அடி தண்ணீர் குறைப்பு
சிறுவாணியில் மதகு திறப்பு நான்கு அடி தண்ணீர் குறைப்பு
சிறுவாணியில் மதகு திறப்பு நான்கு அடி தண்ணீர் குறைப்பு
ADDED : ஜூலை 30, 2025 08:43 PM
கோவை; சிறுவாணி அணையில் மதகை திறந்து தண்ணீரை வெளியேற்றியதால், 40 அடியாக நீர் மட்டம் குறைந்திருக்கிறது.
கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும் சிறுவாணி அணை கேரள வனப்பகுதிக்குள் அமைந்திருப்பதால், அம்மாநில நீர்ப்பாசனத்துறை பராமரிக்கிறது.
மொத்த உயரம், 50 அடியாக இருந்தபோதிலும், பாதுகாப்பு காரணங்களை கூறி, 44.61 அடிக்கே நீர் தேக்கப்படுகிறது. கன மழை பெய்யும் சமயத்தில், மதகை திறந்து, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த, 15ம் தேதி 40.70 அடியாக நீர் மட்டம் இருந்தது. குடிநீர் தேவைக்கு தினமும், 10 கோடி லிட்டர் எடுத்த போதிலும், மழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்தது. 26ம் தேதி, 43.89 அடியாக உயர்ந்ததும், மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அதன் காரணமாக, 27ம் தேதி 42.67 அடியாக குறைந்தது. 29ம் தேதி, 40 அடியாக குறைந்தது. நான்கு அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள நீர்ப்பாசன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, சிறுவாணி அணையில் நீர்க்கசிவு ஏற்படும் இடங்களை சீரமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
அதை செய்தால் மட்டுமே வரும் காலங்களில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க முடியும்; கோடை காலத்தில் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியும்.